மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தனிப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் வெளியீடு - பிப்ரவரி 18-ம் தேதிக்குள் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் கோரப்படுகிறது
Posted On:
03 JAN 2025 9:44PM by PIB Chennai
மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனிப்பட்ட டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு சட்டம் -2023-ஐ (DPDP சட்டம்) செயல்படுத்த வசதியாக தனிப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகள்- 2025- ஐ உருவாக்கியுள்ளது.
தேவையான விவரங்களையும் செயல்பாட்டுக் கட்டமைப்பையும் வழங்குவதன் மூலம் டிஜிட்டல் தரவைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வரைவு விதிகள் குறித்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 பற்றிய விளக்கக் குறிப்பைக் காண இந்த இணைய தள இணைப்பைப் பார்க்கவும்:
https://www.meity.gov.in/writereaddata/files/Explanatory-Note-DPDP-Rules-2025.pdf
விதிகள் உருவாக்கத்தில் சாரல் கட்டமைப்பிற்கு இணங்க, எளிய நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரைவு விதிகளை அணுகவும், புரிந்து கொள்ளவும் உதவும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கக் குறிப்புகளுடன் விதிகளின் உரை
https://www.meity.gov.in/data-protection-framework
என்ற இணையதள இணைப்பில் உள்ளது.
வரைவு விதிகளின் கண்ணோட்டம்:
பல்வேறு அம்சங்களைப் பற்றி வரைவு விதிகள் விவரிக்கின்றன. குழந்தைகள் தொடர்பான நடைமுறைகளை செயலாக்குதல், தரவு பாதுகாப்பு வாரியத்தை அமைத்தல், வாரியத்தின், பிற உறுப்பினர்களின் நியமனம், சேவை நிபந்தனைகள், வாரியம் டிஜிட்டல் அலுவலகமாக செயல்படுதல், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வதற்கான நடைமுறை போன்றவை இதில் உள்ளன.
வரைவு விதிகளுக்கான பின்னூட்டங்கள் / கருத்துகள்:
இது தொடர்பாக, கருத்துகள் / ஆலோசனைகளை MyGov தளம் வழியாக பின்வரும் இணைப்பில் சமர்ப்பிக்கலாம்: https://innovateindia.mygov.in/dpdp-rules-2025
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 18 பிப்ரவரி, 2025 ஆகும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற டிபிடிபி சட்டம், தனிப்பட்ட டிஜிட்டல் தரவைச் செயலாக்குவதற்கான கட்டமைப்பை நிறுவுகிறது. சட்டபூர்வமான நோக்கங்களுக்காக அத்தகைய தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கான தேவையுடன் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான தனிநபரின் உரிமையை இது வழங்குகிறது.
****
PLM/KV
(Release ID: 2090080)
Visitor Counter : 43