நித்தி ஆயோக்
'ஃபரல் சகி' முன்முயற்சியின் மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க மீரா பயந்தர் மாநகராட்சியுடன் மகளிர் தொழில்முனைவோர் தளம் கூட்டு சேர்ந்துள்ளது
Posted On:
03 JAN 2025 11:27AM by PIB Chennai
மகாராஷ்டிராவின் மீரா பயந்தர் நகரில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட 'ஃபரல் சகி' என்ற முதன்மை முயற்சியை மீரா பயந்தர் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பாரம்பரிய சிற்றுண்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அவர்களின் முயற்சிகளை நிலையானதாகவும் திறம்படவும் அளவிட உதவும் விரிவான பயிற்சியையும், ஆதரவையும் இந்த திட்டம் வழங்கும்.
பாரம்பரிய பண்டிகைக்கால தின்பண்டங்களின் ('ஃபரல்') உற்பத்தி மற்றும் விற்பனையில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை 'பரல் சகி' முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. மீரா பயந்தர் மாநகராட்சி அமைத்த ஒரு மத்திய சமையலறை, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த தின்பண்டங்களை தொழில் ரீதியாக தயாரிக்க உதவுகிறது. இந்த பெண்களுக்கு விற்பனை இடங்களை வழங்குவதன் மூலமும், நகராட்சி விளம்பரங்கள் மூலம் அவர்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலமும் உதவுகிறது. தீபாவளி பண்டிகையின் போது, இந்த முயற்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அவற்றின் உயர்ந்த தரம் மற்றும் சுவை காரணமாக 3 டன்களுக்கும் அதிகமான தின்பண்டங்கள் விற்பனை ஆனது.
மீரா பயந்தரைச் சேர்ந்த 25 பெண்கள் வணிக நடவடிக்கைகளில் தொழில்நுட்ப பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கல்வி, ஆளுமை மற்றும் பொதுக் கொள்கை மையத்தின் உதவியோடு அளிக்கப்பட்ட இந்த பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு நிலையான வணிகங்களை நிறுவுவதற்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதற்கும் தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் அவர்களை தயார்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089747
***
TS/SMB/RR/KR
(Release ID: 2089769)
Visitor Counter : 29