ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் சக்தி அமைச்சகம் ஜல்சக்தி மற்றும் துப்புரவு துறை 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
01 JAN 2025 3:17PM by PIB Chennai
தூய்மை இந்தியா இயக்கம் - ஊரக வளர்ச்சி
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமான 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதன் மூலம், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம் மத்திய அரசின் நிதியுதவியுடன் 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் விளைவாக, 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களும், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவித்தன. மேலும் 2014 -ம் ஆண்டில் 39 சதவீதமாக இருந்த கிராமப்புற சுகாதாரம் 2019-ம் ஆண்டில் 100 சதவீதமாக அதிகரித்தது.
திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை எட்டும் வகையில், தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டம் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தனிநபர் இல்லக் கழிப்பறைகள், முறையான கழிவு மேலாண்மை அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட கிராமங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத முன்மாதிரி கிராமங்களாக மாற்றும் முயற்சியில் எந்த ஒரு பின்னடைவும் இல்லாத நிலையை உறுதிசெய்யும் வகையில், தூய்மை இந்தியா இயக்கத்தின் இந்த இரண்டாம் கட்டம் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் 2-வது கட்டத்தின் நோக்கங்கள்:
கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் 2-வது கட்டத்தில் ஊரகப்பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் ஊரகப் பகுதிகளின் தூய்மை நிலையை மேம்படுத்துவதும், அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையில் மாற்றுவதும் ஆகும்.
• திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை
• திடக்கழிவு மேலாண்மை
• திரவக் கழிவு மேலாண்மை
• துப்புரவு பணிகள்
2024-ம் ஆண்டின் முக்கிய சிறப்பம்சங்கள்
• திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 460% அதிகரித்து, 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 லட்சம் கிராமங்களாகவும், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5.61 லட்சத்துக்கும் அதிகமான திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களின் எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது
• கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டத்திற்கான மொத்த திட்ட நிதி ஒதுக்கீடு 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089254
***
TS/SV/AG/DL
(Release ID: 2089412)
Visitor Counter : 42