நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்: 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
01 JAN 2025 4:51PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு விதமான பணிகளை கையாளும் அலுவல்கள் அனைத்தும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த அமைச்சகமானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. அவ்வப்போது சில கூடுதல் பொறுப்புகள், செயல்பாடுகள் இந்த அமைச்சகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள்/ நிகழ்வுகள்/ சாதனைகள் பின்வருமாறு:
நாடாளுமன்ற அவைகளின் அலுவல்கள்
|
மக்களவை
|
மாநிலங்களவை
|
தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை
|
24
|
5
|
நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை
|
20
|
18
|
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்
|
16
|
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 2024:
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 2024-ன் அமர்வுகளில் (17-வது மக்களவையின் 15-வது, கடைசி அமர்வு) மற்றும் மாநிலங்களவையின் 263-வது அமர்வு 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 10 தேதி அன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி1-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பதினெட்டாவது மக்களவையின் முதல் அமர்வு:
18-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, மக்களவையின் முதல் கூட்டத் தொடர் மற்றும் மாநிலங்களவையின் 264-வது கூட்டத்தொடர் முறையே 2024-ம் ஆண்டு ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மக்களவை 2024-ம் ஆண்டு ஜூலை2 தேதி அன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது, மாநிலங்களவை 2024 -ம் ஆண்டு ஜூலை3-ம் தேதி அன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் முதல் இரண்டு நாட்கள் 18-வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் / ரகசிய காப்பு பிரமாணம் எடுத்து கொள்வதற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் / ரகசிய காப்பு பிரமாணம் நிகழ்ச்சிகளை எளிதாக்கும் வகையில், திரு பர்த்ருஹரி மெஹ்தாப் அவர்களை அரசியலமைப்பு சட்டத்தின் 95 (1) வது பிரிவின் படி தற்காலிக மக்களவைத் தலைவராக குடியரசுத் தலைவர் நியமித்தார்.
2024-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி மக்களவை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் திரு ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதினெட்டாவது மக்களவையின் இரண்டாவது அமர்வு:
2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக 2024-25-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள், பட்ஜெட் (பொது) தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாக்கள் மக்களவையில் முறையே ஜூலை30-ம் தேதி மற்றும் ஆகஸ்ட்05-ம் தேதிகளில் நிறைவேற்றப்பட்டன, அவை மாநிலங்களவையில் 2024 ஆகஸ்ட் 8 -ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்:
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் குடியரசுத் தலைவர் தலைமையில் "அரசியல் சாசன தினத்தன்று" நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, "இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆண்டுகால புகழ்பெற்ற பயணம்" குறித்த சிறப்பு விவாதம் 2024 -ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மக்களவையிலும், மாநிலங்களவையில் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளிலும் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089335
***
TS/SV/AG/DL
(Release ID: 2089411)