பிரதமர் அலுவலகம்
2025-ம் ஆண்டில் மேலும் கடினமாக பணியாற்றவும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கனவை நனவாக்கவும் தீர்மானித்துள்ளோம்: பிரதமர்
Posted On:
31 DEC 2024 1:27PM by PIB Chennai
2024-ம் ஆண்டில் எட்டப்பட்ட சாதனைகள் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டில் மேலும் கடினமாக பணியாற்றவும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கனவை நனவாக்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் MyGovIndia வெளியிட்ட காணொளி பதிவிற்கு பதிலளித்த திரு மோடி கூறியதாவது:
"கூட்டு முயற்சிகள் மற்றும் உருமாறி வரும் விளைவுகள்!
2024-ம் ஆண்டில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவை இந்த வீடியோவில் அற்புதமாக தொகுத்து தரப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக பணியாற்றவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
***
(Release ID: 2088999)
TS/SV/RR/KR
(Release ID: 2089135)
Visitor Counter : 20