அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் : 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
27 DEC 2024 11:13AM by PIB Chennai
2024-ம் ஆண்டில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள்
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் மத்திய சாலை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (சிஆர்ஆர்ஐ) உள்நாட்டு சாலை கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள மிகக் குறைந்த வெப்பநிலைக்கான அதிக உயரத்தில் உள்ள பிட்மினஸ் சாலைகளை எல்லைப்புறச் சாலைக் கழகம் (பி.ஆர்.ஓ) வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது. லடாக் டிராஸில் உள்ள டிராஸ்-உம்பாலா-சங்கூ சாலையில் அதிக உயர பிட்டுமினஸ் சாலைகளை அமைக்க கார்கிலில் உள்ள எல்லைப்புற சாலை கழகத்தின் திட்டமான விஜயக் மூலம் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கு சிஎஸ்ஐஆர் தொழில்நுட்ப ரீதியாக உதவியுள்ளது. சிஎஸ்ஐஆர்-மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி.பி.ஆர்.ஐ) வடிவமைத்த "சூர்ய திலகர்" அமைப்பு, மதியம் 12 மணி முதல் சுமார் ஆறு நிமிடங்கள் ராமர் சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்களை செலுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கட்டமைப்பானது 2,500 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் நில அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜாம்ஷெட்பூரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.எம்.எல்) சி.எஸ்.ஐ.ஆரின் மொத்த இரசாயன இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் லித்தியம் பேட்டரி மறுசுழற்சி ஆலையை நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத் திறந்து வைத்தார். இந்த முயற்சி தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்திசைந்ததாக உள்ளது. பேட்டரி உற்பத்தியில் தற்சார்பு நிலையை உறுதி செய்யும் வகையில் லித்தியம் பேட்டரி மறுசுழற்சி ஆலை, சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
சிஎஸ்ஐஆர் - கேபிஐடி ஆகியவற்றின் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் உருவாக்கிய நாட்டிலேயே முதல் முறையாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் கட்டுமரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் அறிமுகப்படுத்தினார். ரூ.18 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படகு பல்வேறு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கடும் சோதனைகளுக்குப் பிறகு சி.எஸ்.எல் நிறுவனத்தால் உள்நாட்டு நீர்வழி ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.
சி.எஸ்.ஐ.ஆர்-வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.இ.ஐ.எஸ்.டி), மேகாலயாவின் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் "பெகோனியா நரஹரி" என்ற புதிய பூக்கும் தாவரத்தை கண்டுபிடித்துள்ளது. உலகளவில் அறியப்பட்ட பெகோனியா தாவர வகைகளுடன் ஆய்வு செய்து ஒப்பிட்ட பிறகு, ஆராய்ச்சியாளர்கள் அதன் அடையாளத்தை பெகோனியா இனமாக உறுதிப்படுத்தினர். இந்த இனத்திற்கு "பிகோனியா நரஹரி" என்று பெயரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவின் பல்லுயிர் வளங்களுக்கான ஜெர்ம்பிளாசம் பாதுகாப்பு மையத்தை நிறுவுவதில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக ஜோர்ஹாட்டில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-என்.இ.ஐ.எஸ்.டி முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஜி நரஹரி சாஸ்திரி கௌரவிக்கப்பட்டார்.
சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி.டி.ஆர்.ஐ) எலும்பு முறிவுக்குப் பிறகு குணப்படுத்தும் சிகிச்சை நடைமுறைகளை விரைவுபடுத்த உதவும் வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் தற்போது சி.டி.ஆர்.ஐ-1500 மற்றும் சி.டி.ஆர்.ஐ-399 ஆகியன இரண்டு வகையான எலும்பு சிகிச்சைக்கான மருந்துகளாக அறியப்படுகிறது. மருந்து உற்பத்திக்கான ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் சி.டி.ஆர்.ஐ-1500 மருந்துக்கான முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் விரைவில் தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088289
**
TS/VIS/KPG/KV
(Release ID: 2088396)
Visitor Counter : 33