நிதி அமைச்சகம்
நிதிச்சேவைகள் துறை (நிதி அமைச்சகம்) : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
26 DEC 2024 6:02PM by PIB Chennai
நிதிச் சேவைகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் 2024-ம் ஆண்டில் விரைவு படுத்தப்பட்டன. ஆபத்துக் காரணிகள் குறித்த மதிப்பீடு, வாராக்கடன் சொத்துக்களின் மேலாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள், வாடிக்கையாளர் சேவை, டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
இந்திய வங்கிகள் சங்கத்தின் வழிநடத்தும் குழுவால் நிர்வகிக்கப்படும் எளிமைபடுத்தப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தற்போது அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நிதிச் சேவைகளில் உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளில் பயன்பாடற்ற சொத்துக்களின் மீதான வாராக்கடன் மதிப்பை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி 2024 முதல் நவம்பர் 2024 வரை 223 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதே காலகட்டத்தில் பீம்-செயலி மூலம் 15,547 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது.
பிரதமரின் ஜன் தன் திட்டம், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம், முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா, அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது.
வேளாண் துறையில், 2014-15-ம் நிதியாண்டில் 8.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வேளாண் கடன் 2023-24-ம் நிதியாண்டில் 24.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வேளாண் கடன் அட்டை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது, 7.92 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள செல்லத் தகுந்த வேளாண் கடன் அட்டைகள் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் இடையூறு இல்லாத கடன் வசதியை வழங்குகின்றன.
பொதுத்துறை வங்கிகளின் நிகர வாராக் கடன் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.15 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (3.92%) 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 0.68 லட்சம் கோடி ரூபாயாக (0.71%) குறைந்துள்ளது. நிதி சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆரோக்கியம் கணிசமாக மேம்பட்டுள்ளது,
கூகுள் பே நிறுவனம் சர்வதேச அளவில் செயல்படுவதற்காக இந்திய தேசிய பணம் செலுத்தும் முகமை நிறுவனத்துடன் (என்.பி.சி.ஐ.) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒருங்கிணைந்த பணம் செலுத்துகை நடைமுறைகள் தற்போது பிரான்ஸ் நாட்டிலும், ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இந்த பணம் செலுத்தும் நடைமுறை தற்போது நேபாளத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2088182
***
TS/SV/AG/DL
(Release ID: 2088221)
Visitor Counter : 56