பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

Posted On: 26 DEC 2024 5:48PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவை வலுவான, பாதுகாப்பான, தற்சார்பான, வளமான தேசமாக மாற்ற பாதுகாப்பு அமைச்சகம்  பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக திரு ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரது தலைமையின் கீழ், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் சில பகுதிகளில் யதார்த்த நிலையை மீட்டெடுக்க ஒத்த கருத்தை

இந்தியாவும் சீனாவும் எல்லையில் ஒருமித்த கருத்தை  எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரு நாடுகளுக்குமிடையே உள்ள எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண தூதரக மற்றும் ராணுவ அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் விளைவாக, பரஸ்பர பாதுகாப்பு அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டது.

பாதுகாப்பில் தன்னிறைவு

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை  ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பு தளவாட இறக்குமதியைக் குறைப்பதற்கும்  ஏதுவாக தற்சார்பு இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த  பாதுகாப்பு தளவாடங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 4,666 பாதுகாப்பு தளவாடங்களை உள்ளடக்கிய நான்கு பட்டியல்கள் வெளியிடப்பட்டன.  அவற்றில் 3,400 கோடி ரூபாய் இறக்குமதி மதிப்புள்ள  2,972 பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசின் கொள்கைகள்முன்முயற்சிகளை வெற்றிகரமாக அமல்படுத்தியதன் வாயிலாக, 2023-24-ம்  நிதியாண்டில் மதிப்பு அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. பாதுகாப்பு  தளவாட உற்பத்தி 1,26,887 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது முந்தைய நிதியாண்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியைக் காட்டிலும் 16.7% கூடுதலாகும் .வரும் 2029-ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாட உற்பத்தியில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி 21,083 கோடி ரூபாயை (தோராயமாக 2.63 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியது. இது முந்தைய நிதியாண்டில் 15,920 கோடி ரூபாயாக இருந்ததை விட 32.5% வளர்ச்சியாகும். 2013-14 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி 31 மடங்கு அதிகரித்துள்ளது.

இரண்டாவது அரிஹாத்  ரக நீர்மூழ்கிக் கப்பல் 'ஐஎன்எஸ் அரிஹாத்'  2024 ஆகஸ்ட் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.   இந்திய விஞ்ஞானிகள், தொழில்துறை, கடற்படை பணியாளர்களால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட நவீன சாதனங்களுடன் கூடிய போர்க்கப்பலாக இது அமைந்துள்ளது.

 ஐஎன்எஸ் துஷில் என்ற நவீன ஏவுகணை போர்க்கப்பல், 2024 டிசம்பர் 09-ம் தேதி ரஷ்யாவின் கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது மேம்படுத்தப்பட்ட கிரிவாக் III வகை போர்க்கப்பலாகும். அவற்றில் ஆறு போர்க்கப்பல்கள் ஏற்கனவே  இந்திய கடற்படைப் பணியில் உள்ளன -

 நாட்டின் பாதுகாப்பு தடவாளங்களின் உற்பத்தியில் உத்வேகத்தை அளிக்கும் வகையிலும், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கும்  பாதுகாப்பு கொள்முதல் குழுமம், பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஆகியவற்றின் மூலம் 2024-ம் ஆண்டில் (நவம்பர் வரை), 4,22,129.55 கோடி ரூபாய் மதிப்பிலான 40 மூலதன  கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் கவச போர் வாகனங்களுக்கான மேம்பட்ட நில வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் இந்தியக் கடலோர காவல்படைக்கான அதிநவீன அமைப்புடன் கூடிய 22 இடைமறிப்பு படகுகளை கொள்முதல் செய்வது உள்ளிட்ட மூலதன கொள்முதல் திட்டங்களுக்கு 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்தது.

முக்கிய ஒப்பந்தங்கள்

2024-ம் ஆண்டு அக்டோபர் 31 -ம் தேதி  எம்கியூ 9 பி விமானத்தை  கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.

இந்திய கடற்படைக்கான 25 டோர்னியர் விமானங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களுக்காக 2,890 கோடி ரூபாய் செலவில் மத்திய ரக விமான மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு  மார்ச் மாதம் கையெழுத்தானது.

பாதுகாப்பு பட்ஜெட்

2024-25-ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 6.22 லட்சம் கோடி ரூபாய் (தோராயமாக 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  2022-23 நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை விட  இது 1 லட்சம் கோடி ரூபாய் (18.43%)  கூடுதலாகும். இதில், 27.66% பங்கு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கான மூலதனச் செலவாக இருக்கும்.

ககன்யான் திட்டம்

பூமியின் சுற்றுப்பாதையில் மனித விண்வெளிப் பயணத் திறனை நிரூபிப்பதற்காக மத்திய அரசால் ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, 5 முதல் 7 நாட்கள் சுற்றுப்பாதை பணிக்காக மனிதனைச் சுமந்து செல்லும் விண்கலம்  ஒன்று லியோவுக்கு அனுப்பப்படும்.

நாட்டின் எல்லைப்பகுதிகளில் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்திய ராணுவம் தயார்நிலையில் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும்வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில், எல்லைப்பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உத்வேகம்  பெற்றுள்ளன.

இந்திய கடற்படை

தற்போது இந்தியாவில் 133-க்கும் மேற்பட்ட கப்பல்கள் / நீர்மூழ்கிக் கப்பல்கள்  உருவாக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இதுஇந்திய கடற்படை பாதுகாப்பு சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இந்திய கப்பல் கட்டும் துறையின் வளர்ச்சியை  ஊக்குவிக்கும் வகையில், 64 போர்க்கப்பல்களில் 63 போர்க்கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய விமானப்படை

சி-295 மெகாவாட் ரக விமானங்களை ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சி -295  ரக விமானம் வரும் 2026-ல் ஆண்டில் படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக சினூக் ஹெப்டரில் இருந்து குழு தொகுதியின் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2088180

***

TS/SV/AG/DL


(Release ID: 2088214) Visitor Counter : 50


Read this release in: English