புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
"இந்தியாவில் சம்பளப் பட்டியல் அறிக்கை: ஒரு வேலைவாய்ப்பு கண்ணோட்டம் -அக்டோபர், 2024" வெளியீடு
Posted On:
26 DEC 2024 5:36PM by PIB Chennai
ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ் சந்தா செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி, முறைசார் துறையில் செப்டம்பர் 2017-லிருந்து வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
Payroll Reporting in India An Employment Perspective – October, 2024.pdf என்ற இணைய முகவரியில் முழுமையான அறிக்கையைக் காணலாம்
2.1 ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம்:
2024 அக்டோபர் மாதத்தில் புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 7,50,058 ஆகும், இது 2024 செப்டம்பர் மாதத்தில் 9,87,988 ஆக இருந்தது.
2.2 தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம்:
2024 அக்டோபர் மாதத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்த மற்றும் பங்களிப்பு செலுத்தும் ஊழியர்களின் எண்ணிக்கை 12,93,076 ஆகும், இது 2024 செப்டம்பர் மாதத்தில் 15,09,736 ஆக இருந்தது.
2.3 தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்):
2024, அக்டோபரில், என்பிஎஸ் மொத்தம் 64,977 புதிய பங்களிப்பு சந்தாதாரர்களைப் பதிவு செய்தது, இது 2024 செப்டம்பர் மாதத்தில் 58,018 ஆக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088172
***
TS/SMB/AG/DL
(Release ID: 2088212)
Visitor Counter : 22