குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

Posted On: 24 DEC 2024 5:20PM by PIB Chennai

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்துமஸ் உணர்வானது நம்பிக்கை, இரக்கம், ஒற்றுமை  ஆகியவற்றின் உலகளாவிய செய்தியை வழங்குகிறது. கிறிஸ்துவின் போதனைகள் தற்காலத்திற்கு மிகவும்  பொருத்தமானவை.  இவை அனைத்து மக்களிடையேயும் கருணை, புரிதல், பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படை முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த கொள்கைகள் சகோதரத்துவம், சமத்துவம், நீதி ஆகிய நமது அரசியலமைப்பு மதிப்புகளுடன் சரியாக ஒத்துப்போகின்றன. இந்த மகிழ்ச்சியான தருணத்தை நாம் கொண்டாடும் வேளையில், வாய்ப்புகள் கிடைக்காதவர்களை நாம்  நினைவுகூர்ந்து அவர்களும், செழித்து வளரக்கூடிய ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.

பண்டிகை காலம் நமது நாடு முழுவதும் உள்ள வீடுகளை அரவணைப்பு, அன்பு, நல்லிணக்கத்துடன் ஒளிரச் செய்யட்டும். கிறிஸ்துமஸ் கொண்டு வரும் அமைதி, நல்லெண்ணத்தின் செய்தி ஒரு வலுவான தேசத்தை நோக்கிய நமது பயணத்தில் நமக்கு வழிகாட்டட்டும்.”

----

TS/PLM/KPG/DL


(Release ID: 2087666) Visitor Counter : 25