பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெசா சட்டம் குறித்த தேசிய பயிலரங்கு 2024, டிசம்பர் 24 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறவுள்ளது

Posted On: 23 DEC 2024 12:24PM by PIB Chennai

பஞ்சாயத்துகள் (ஷெட்யூல்ட் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996 (பெசா சட்டம்) பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை 2024, டிசம்பர்  24 அன்று ராஞ்சியில்  தேசிய பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பெசா சட்டம் குறித்த பயிலரங்கில் ஜார்க்கண்ட் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகப் பணிகள் துறை அமைச்சர் திருமதி தீபிகா பாண்டே சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், ஷெட்யூல்ட் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெசாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுவார். இந்தச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைப்பார்.

பெசா சட்டத்திற்கு ஏற்ப ஜார்க்கண்ட் தனது பெசா விதிகளை இறுதி செய்யும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, சட்டத்தின் நோக்கங்கள், சாதனைகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்து கவனம் செலுத்தும் அதே வேளையில்,  உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதில்  விமர்சன ரீதியான பங்கு குறித்த விவாதங்களில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை ஈடுபடுத்தும் ஒரு முக்கிய தளமாகவும் செயல்படும். ஒரு நாள் முழுவதும் நடைபெறும் பெசா பயிலரங்கு அர்த்தமுள்ள உரையாடலை எளிதாக்குவதற்கும், இலக்கு நிர்ணயக்கப்பட்ட  சமூகங்களுக்கு பயனளிக்கும் செயல்பாட்டு விளைவுகளை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட பகுதிகளில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் பெசாவின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும், பெசாவின் சாராம்சம் மற்றும் தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு குறும்படத் திரையிடலும் ஒரு பாடலும் இந்த நிகழ்வில்  இடம்பெறும். முக்கிய உரைகள், பழங்குடி மரபுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்த குழு விவாதங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார விளக்கக்காட்சிகள் ஆகியவையும் இந்த நிகழ்வில்  இடம்பெறும். பெசா சட்டத்தை வலுவாக அமல்படுத்துவதன் மூலம் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குத் தெளிவான பாதையை வகுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்தப் பயிலரங்கு நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய பத்து பெசா மாநிலங்கள் அந்தந்த பிராந்தியங்களில் பயனுள்ள விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087187

  

***

TS/SMB/RR/KR

 

 


(Release ID: 2087228) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi