பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நல்லாட்சி வாரம்  2024-ன் ஒரு பகுதியாக, “ கிராமங்களை நோக்கி நிர்வாகம் ” நாடு தழுவிய பிரச்சாரம் டிசம்பர் 19-24 வரை இந்தியா முழுவதும் 700 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

Posted On: 21 DEC 2024 6:44PM by PIB Chennai

 

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறை, 2024 டிசம்பர் 19 முதல் 24 வரை நடைபெறும் நாடு தழுவிய கிராமங்களை நோக்கி நிர்வாகம்  2024 பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கான முக்கியத் துறையாகும்.

டிசம்பர் 20, 2024 அன்று, 700 மாவட்டங்களில் இந்தப் பிரச்சார நடவடிக்கைகள் நடத்தப்பட்டன, தாலுகா / பஞ்சாயத் தலைமையகத்தில் 20,463 முகாம்கள் நடத்தப்பட்டன, 1,54,39,614 சேவை வழங்கல் விண்ணப்பங்கள் தீர்த்து வைக்கப்பட்டன.10,69,993 பொதுமக்கள் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டன.

2024 டிசம்பர் 19 முதல் 24 வரை  இந்தப் பிரச்சாரம் தொடரும். மாவட்ட நிர்வாகத்தின் 3 நல்ல நிர்வாக நடைமுறைகள்/முயற்சிகள் மற்றும் சேவையில் மேம்பாடுகள் குறித்து விவாதிக்கும் மாவட்ட அளவிலான பரப்புரை பயிலரங்கு டிசம்பர் 23, 2024 அன்று நடைபெறும்.

"கிராமங்களை நோக்கி நிர்வாகம்’’ பிரச்சாரம் , சேவைகளை வீட்டு வாசலில் வழங்குவதற்கும், பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சாரமாக இருக்கும்.

*****

PKV/KV

 

 


(Release ID: 2086864) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Marathi , Hindi