பிரதமர் அலுவலகம்
ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியாக்கம் செய்த அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டு
Posted On:
21 DEC 2024 7:03PM by PIB Chennai
ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அரபு மொழிபெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதை மொழிபெயர்த்து வெளியிட எடுத்த முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீஃப் அல்-நெசெஃப் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் இந்த முயற்சி உலக அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது."
*****
PLM/KV
(Release ID: 2086839)
Visitor Counter : 20