நிதி அமைச்சகம்
என்பிஎஸ் சூழல் அமைப்பின் முக்கிய தரப்பினர் ஒன்றிணைந்து என்பிஎஸ் தொடர்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்
Posted On:
21 DEC 2024 3:34PM by PIB Chennai
மும்பையில் உள்ள இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் இன்று நடைபெற்ற "ஓய்வூதியத்துடன் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பிலான மாநாட்டில் என்பிஎஸ் தொடர்பாளர்கள் சங்கம் (ஏஎன்ஐ) அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் சின்னத்தை பிஎஃப்ஆர்டிஏ தலைவர் டாக்டர் தீபக் மொஹந்தி வெளியிட்டார். இந்த மைல்கல் முன்முயற்சி தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) சூழல் அமைப்பின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது. ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், சந்தாதாரர் நலனை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கு ஒரு முக்கியமான ஓய்வூதிய திட்டமிடல் கருவியாக என்பிஎஸ்-சின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் நிகழ்ச்சியில் காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். புதிதாக உருவாக்கப்பட்ட என்பிஎஸ் தொடர்பாளர்கள் சங்கத்திற்கு டி.எஃப்.எஸ் செயலாளர் வாழ்த்து தெரிவித்தார். அதிகரித்துவரும் மக்கள் தொகை எண்ணிக்கை, விரைவான நகரமயமாக்கல், குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை காரணமாக, ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒரு தனிநபரால் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டில் பேசிய பிஎஃப்ஆர்டிஏ (PFRDA) தலைவர் டாக்டர் தீபக் மொஹந்தி, என்பிஎஸ் தொடர்பாளர்கள் சங்கத்தின் தொடக்கம் ஓய்வூதியத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்றார். கூட்டு முயற்சிகள், பின்னூட்ட கருத்து அமைப்பு மூலம் இந்தியாவில் ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தங்களது முயற்சிகளை இது மேலும் வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
என்பிஎஸ் தொடர்பாளர்கள் சங்கம் (ஏஎன்ஐ) பற்றி:
என்பிஎஸ் தொடர்பாளர்கள் சங்கம் என்பது என்பிஎஸ் சூழல் அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கூட்டு தளமாகும். அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், சந்தாதாரர்களின் நலனை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவில் ஓய்வூதியத் திட்டமிடலின் எதிர்காலத்தை வடிவமைக்க கொள்கை வகுப்பாளர்களுடன் ஒத்துழைப்பதற்கும் இது உறுதிபூண்டுள்ளது.
சங்கத்தின் முதன்மை நோக்கங்கள்:
*என்பிஎஸ்-ஐ ஊக்குவிப்பது.
* வெளிப்படையான செயல்முறைகளை உறுதி செய்வதன் மூலம் சந்தாதாரர் நலனில் கவனம் செலுத்துதல்.
*என்பிஎஸ் கட்டமைப்பை மேம்படுத்த கட்டுப்பாட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன் ஒத்துழைத்து ஓய்வூதிய சந்தையை மேம்படுத்த பங்களித்தல்.
*****
PLM/KV
(Release ID: 2086796)
Visitor Counter : 16