ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில் சேவைக்கான மிக உயரிய விருதை 101 ரயில்வே அதிகாரிகளுக்கு திரு அஸ்வினி வைஷ்ணவ் வழங்குகிறார்

Posted On: 20 DEC 2024 3:53PM by PIB Chennai

இந்திய ரயில்வேயில் சிறப்பாக சேவையாற்றிய 101 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மிகச் சிறந்த ரயில் சேவைக்கான அதி விஷிஷ்ட் ரயில் சேவை புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. "நான் பாரதிய ரயில்" என்ற கருப்பொருளில் இந்த 69-வது விருது வழங்கும் விழா 2024-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. மத்திய ரயில்வே மற்றும் தகவல் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவில் ரயில்வே மற்றும் ஜல் சக்தி துறை இணையமைச்சர் திரு வி.சோமண்ணா, ரயில்வே மற்றும் உணவு பதனப்படுத்தும் தொழில் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங், ரயில்வே வாரியத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி திரு சதீஷ் குமார், ரயில்வே வாரிய உறுப்பினர்கள், பல்வேறு ரயில்வே மண்டலங்கள், உற்பத்தி பிரிவுகளின் பொது மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

•    சிறப்புக்கான அங்கீகாரம்: உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், வருவாய் ஈட்டுதல், பாதுகாப்பு, செயல்பாட்டில் முன்னேற்றம், திட்ட நிறைவு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 101  பேர் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

•    புதுமை, செயல்திறனை ஊக்குவித்தல்: புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், இறக்குமதி சார்பு நிலையைக் குறைத்தல், உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அவர்களது அர்ப்பணிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது இந்திய ரயில்வேயை மிகவும் திறமையான, பாதுகாப்பான, பயணிகளுக்கு ஏற்ற அமைப்பாக மாற்றுவதில் ரயில்வே பணியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086474

                               ***      

TS/SV/RR/DL


(Release ID: 2086548) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi