ஆயுஷ்
தேசிய ஆயுஷ் இயக்கத்தில் சித்த மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா
Posted On:
19 DEC 2024 5:49PM by PIB Chennai
பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் 8 வது சித்த தினம் 19 டிசம்பர் 2024 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்தினார். கல்வி மற்றும் சிறு அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களில் சாதனை படைத்த பெண் சித்த மருத்துவர்களை அவர் பாராட்டினார்., கோவிட் பெருந்தொற்றுக்கான தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைக்கான மருந்தாக கபசுர குடிநீரைச் சேர்த்ததற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சித்தாவில் உள்ள இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளம் தலைமுறையினரை வலியுறுத்தினார். ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களைப் பெற 22 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும், சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அவர் தெரிவித்தார். நாட்டில் கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இத்துறை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுஷ் மருத்துவ முறைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இது ஆயுஷ் துறையின், பொற்காலம் என்றும் வளர்ந்து வரும் சித்த மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சித்த மற்றும் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் வளர்ச்சியில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆகியவற்றின் பங்களிப்பை அவர் பாராட்டினார். மேலும் தேசிய சுகாதார அமைப்பிற்காக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் உருவாக்கிய ஆயுஷ் ஹெல்த் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் (A-HMIS) பணியை வெகுவாக பாராட்டினார்.
பின்பு காணொலிக் காட்சி வாயிலாக மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அவர்கள் கூறுகையில், சித்தா தினத்தை ஏற்பாடு செய்ததற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மற்றும் பேராசிரியர் NJ முத்துக்குமார் DG CCRS மற்றும் CCRS குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். சித்தாவின் பல்வேறு அம்சங்கள் மற்றும் நவீன மேம்பாடுகளின் பரவலான புழக்கத்திற்காக சித்தா கண்காட்சியைத் திட்டமிடுவதற்கு அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கு இந்த முறை பங்களிக்கும் வகையில், சித்தர் தினத்தை கொண்டாடுவதன் மூலம் பண்டைய சித்த மருத்துவ முறையை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 8வது சித்தர் தின விழா சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய மருத்துவ முறைகளுக்காக தனி அமைச்சகம் உருவாக்கியிருப்பதை நினைவு கூர்ந்தார். இந்திய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க கடந்த எட்டு ஆண்டுகளில் ஆயுஷ் அமைச்சகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பெருந்தொற்று காலத்தில் மக்களின் கோவிட்-19 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ முறைகள் மிகுந்த பயன் அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்
நிகழ்ச்சியில் பேராசிரியர் என் ஜே முத்துக்குமார், தலைமை இயக்குநர், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், பேராசிரியர் ஜெகந்நாதன், யுனானி சித்தா மற்றும் சோவா ரிக்பாவின் வாரிய தலைவர்; என்.சி.ஐ.எஸ்.எம், டாக்டர் ராமன் மோகன் சிங் இயக்குனர் பி.சி.ஐ.எம்.ஹெச், பேராசிரியர் டாக்டர் பானுமதி முன்னாள் இயக்குநர் தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனம்; டாக்டர் ஜி செந்தில்வேல், பொறுப்பு இயக்குநர், தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனம்; டாக்டர் மீனாகுமாரி, முன்னாள் இயக்குநர் தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனம்; டாக்டர் பார்த்தீபன், இணை இயக்குநர் இந்தியத் மருத்துவம் துறை மற்றும் ஹோமியோபதி; பேராசிரியர் மற்றும் டாக்டர் எஸ் செல்வராஜன் சித்த ஆராய்ச்சி அலுவலர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். CCRS இன் முன்னாள் இயக்குனர் டாக்டர் டி ஆனந்தன் மற்றும் சித்தா மருத்துவ முறைகளுக்கு பங்களித்ததற்காக, மருந்தியல் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் இ சசிகலா ஆகியோரை கவுரவித்தது. செயலாளர் டாக்டர் ஜெயவெங்கடேஷ் (எஸ்.ஏ.பி உறுப்பினர் சி.சி.ஆர்.எஸ்) கோகிலா மருத்துவமனை மதுரை, சித்த மருத்துவ சேவைக்கான விருதையும்,. கேரளா பல்கலைக்கழகம், டிஎன் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆகியவற்றில் முதலிடம் பெற்று, கல்வியில் சிறந்து விளங்கியதற்காக ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் CCRS இன் மினி ப்ராஜெக்ட்ஸ் திட்டத்தின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர் மற்றும் வெற்றியாளர்கள் ஆயுஷ் செயலாளரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றனர்.
NCIM ஐச் சேர்ந்த டாக்டர் ஜெகந்நாதன் சித்த மருத்துவ முறையின் மேம்பாட்டிற்காக NCIM எடுத்த பல்வேறு முன்னேற்றங்களை விளக்கினார். டாக்டர் ராமன் மோகன் சிங், இயக்குனர் பிசிஐஎம்ஹெச் சித்தாவிற்காக பிசிஐஎம்ஹெச் உருவாக்கிய மருந்தியல் தரநிலைகள் மற்றும் பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூல் பகுதி 3 தமிழ் மற்றும் சித்த மருத்துவத்தில் இருந்து வரவிருக்கும் மருந்தியல் வெளியீடுகள் பற்றிய நல்ல செய்திகள் பற்றி விளக்கினார். NIS இன் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் மீனாகுமாரி, வர்மத்தில் NIS உருவாக்கிய கின்னஸ் உலக சாதனைக்கான ஆதரவிற்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் CCRS க்கு நன்றி தெரிவித்தார் மற்றும் NIS இல் NCD மற்றும் நீரிழிவு சிகிச்சைகள் குறித்து தெரிவித்தார் NIS இன் பொறுப்பு இயக்குனர் பேராசிரியர் ஜி செந்தில்வேல், சித்தாவின் வர்மம் சிகிச்சையின் முக்கியத்துவம் மற்றும் மலேசியா போன்ற நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் சித்த மருத்துவத்தை பரப்புதலுக்காக சித்த நிறுவனங்கள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து வலியுறுத்தினார்.
பேராசிரியர் டாக்டர் என்ஜே முத்துகுமார், டிஜி சிசிஆர்எஸ் தனது வரவேற்புரையில் சித்த மருத்துவத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் மற்றும் கவுரவங்கள் உட்பட 8வது சித்தர் தின விழா நிகழ்ச்சி நிரல் குறித்து விளக்கினார். மேலும் விழாவில் அவர் சித்த மருத்துவ மாணவர்களுக்கான இந்திய அரசின், சிறு ஆராய்ச்சி திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, முறையே ரூ. 20 ஆயிரம் (10 இளநிலை மாணவர்களுக்கு), ரூ. 30 ஆயிரம் (05 முதுநிலை மாணவர்களுக்கு) ஆராய்ச்சி உதவித்தொகையை வழங்கினார். மேலும் கல்லூரியளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூல் (பகுதி – 3, தமிழ்) மற்றும் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு ஆரோக்கியத்தில் சித்த மருத்துவத்தின் பண்டைய ஞானம் பற்றிய தேசிய மாநாட்டின் செயல்முறைகள், எட்டாவது சித்த மருத்துவ தின விழா மலர் ஆகியவை இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்டன.
நான்கு முழுமையான அமர்வுகள் - "பொது சுகாதாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை - சித்த மருத்துவ முறையின் நோக்கம்" டாக்டர் சையத் ஹிசார் விஞ்ஞானி இ, மருத்துவ ஆராய்ச்சி துறை, ICMR-NIRT, சென்னை; "புழு சூடு" நாம் என்ன செய்ய முடியும்?" டாக்டர். ஜி. சிவராமன் உறுப்பினர், மாநிலத் திட்டக்குழு, சென்னை & நிர்வாக இயக்குநர், ஆரோக்யா ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட், சென்னை: டாக்டர் வி. பாலமுருகன் சித்த மருத்துவர். சித்த மருத்துவம், சென்னை மற்றும் "சித்தா மருத்துவம், பொது சுகாதார முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதி" இந்நிகழ்ச்சியில் சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனம், வர்மம் மருத்துவம் துறை பேராசிரியர்.
240 சித்த தாவரங்கள் மற்றும் 130 மூலிகைப்பொருட்கள், பழங்கால சித்தர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பழங்கால புத்தகங்கள் மற்றும் சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள், சித்த மருத்துவத்தின் பல்வேறு சிகிச்சை முறைகள் அடங்கிய மருத்துவ தாவர கண்காட்சி நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் சித்த மருத்துவ வல்லுநர்கள், சித்த மருத்துவ பேராசிரியர்கள், சித்த மருத்துவர்கள், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 1600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
***************
AD/DL
(Release ID: 2086234)
Visitor Counter : 32