பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் தொடக்கம்
Posted On:
19 DEC 2024 4:22PM by PIB Chennai
இந்தியக் கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கடலோரக் காவல் படைக்கு 14 விரைவு ரோந்து கப்பல்கள், ஆறு அடுத்த தலைமுறை கடலார ரோந்துக் கப்பல்களை கட்டும் பணி இந்தக் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகைக் கப்பல்களில் முதலாவது கப்பல்கள் கட்டும் பணி 19-ந்தேதி தொடங்கப்பட்டது.
இந்தக் கப்பல்களை உருவாக்குவதற்கு எம்டிஎல் நிறுவனத்திற்கு ரூ. 2,684 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக்கான ட்ரோன்கள், முடிவெடுப்பதற்கான செயற்கை நுண்ணறிவு , சூழ்ச்சித்திறனுக்கான ஒருங்கிணைந்த பாலம் அமைப்பு மற்றும் திறமையான செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த இயந்திரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை இந்தக் கப்பல்களில் இடம் பெறும்.
இந்த அதிநவீனக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் கட்டமைக்கப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் வழங்கப்படும். இது அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும். மேலும் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்தும். இந்தக் கப்பல்களை இயக்குவதன் மூலம், கடலோரப் பாதுகாப்பு, இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, தேடல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வது, பிராந்தியத்தில் எழும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விரைவாகச்சமாளிப்பது மற்றும் நாடு முழுவதும் கடல்சார் சட்டத்தை அமல்படுத்துவது போன்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய கடலோரக் காவல் படை சிறப்பாகச் செயல்படும்.
***
TS/PKV/DL
(Release ID: 2086224)