வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பபு வசதியைக்கொண்ட நாடாக இந்தியா விரைவில் மாறும்: மத்திய அமைச்சர் திரு மனோகர் லால்
प्रविष्टि तिथि:
19 DEC 2024 4:29PM by PIB Chennai
வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே நேற்று (18.12.2024) உரையாற்றினார். அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகையை சமாளிக்க நகர்ப்புற போக்குவரத்து ஒரு முக்கியமான அம்சம் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்த அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் 23 நகரங்களில் சுமார் 993 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருப்பதாகவும், நாட்டில் 28 நகரங்களில் சுமார் 997 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உலகின் 2-வது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று அமைச்சர் திரு மனோகர் லால் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
***
TS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2086178)
आगंतुक पटल : 61