சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்

Posted On: 19 DEC 2024 2:15PM by PIB Chennai

2024-ம் ஆண்டில் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள், திட்டங்கள், சாதனைகளில் சில:

  • 18,72,000 எஸ்சி   மாணவர்களுக்கு ரூ.437 கோடி மதிப்பிலான ப்ரீ-மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 41,32,000 எஸ்சி  மாணவர்களுக்கு ரூ.4965 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
  • ஷ்ரேஷ்டா திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டில் சிபிஎஸ்இ / மாநில வாரியங்களால் இணைக்கப்பட்ட 142 தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு 2961 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • பிரதமரின் அஜய் திட்டத்தின் கீழ், 5051 கிராமங்கள் 'ஆதர்ஷ் கிராமம்' ஆக அறிவிக்கப்பட்டுள்ளன; இதில்  1655 திட்டங்களின் கீழ் 3,05,842 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரே டிஜிட்டல் தளத்தின் கீழ் பொருளாதார அதிகாரமளித்தல் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் நெறிப்படுத்தவும் பிரதமரின் சூரஜ் தளம் தொடங்கப்பட்டது, இது பின்தங்கிய வகுப்பினரின் பொருளாதார மேம்பாட்டிற்கான விரிவான தீர்வாக அமைகிறது
  • விஸ்வாஸ் இணையதளம் 1.67 லட்சம் எஸ்சி பயனாளிகளின் கோரிக்கைகளைப் பெற்றுள்ளது.
  • கைவினைஞர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக துலிப் பிராண்ட் தொடங்கப்பட்டது
  • 2023-24 ஆம் ஆண்டில், 80,185 பயனாளிகள் பிரதமரின் தக்ஷ் திட்டத்தின் கீழ் 112 அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி  பெற்றுள்ளனர்.
  • போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் 4.42 கோடி இளைஞர்கள், 2.71 கோடி பெண்கள் உட்பட 13.57 கோடிக்கும் அதிகமான மக்களை சென்றடைந்தது. இது தொடங்கப்பட்டதிலிருந்து 3.85 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் பங்கேற்பை பெற்றுள்ளது.
  • ஸ்மைல் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் 6 மாநிலங்களில் ஆதரவற்ற திருநங்கைகளுக்காக 6 புதிய பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா தொடங்கப்பட்டதிலிருந்து, 3.87 லட்சத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 15.54 லட்சத்துக்கும் அதிகமான உதவி சாதனங்களைப் பெற்றுள்ளனர்
  • மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர்  திரு வீரேந்திர குமார் 28.02.2024 அன்று மணிப்பூரில் 2 விடுதிகள் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தலா 100 இருக்கைகள் கொண்ட விடுதிகள்) கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.  நாடு முழுவதும் பிற மாநிலங்களில் 746 இடங்கள் கொண்ட 6 விடுதிகளைத் திறந்து வைத்தார்.
  • பின்தங்கிய பிரிவு இளம் சாதனையாளர்களுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை திட்டம் ஷ்ரேயாஸ் செயல்படுத்தப்படுகிறது.
  • இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உறைவிடக் கல்விக்கான ஷ்ரேஷ்டா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • 01.01.2024 முதல் 09.12.2024 வரை தேவை-அடிப்படையிலான திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதியுதவி ரூ.512.83 கோடியாகும்.
  • இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கான விடுதிகள் கட்டும் திட்டத்தின் கீழ் 01.01.2024 முதல் 09.12.2024 வரை 400 இடங்களுக்கு ரூ.859 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம்   2024 ஜனவரி முதல் நவம்பர் வரை 63,014 பயனாளிகளுக்கு உதவி செய்த வகையில் ரூ.455.77 கோடியை வழங்கியுள்ளது.
  • ஷில்ப் சமகம் மேளா, டெல்லி ஹாத், இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி, சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் மேளா போன்ற நாட்டின் முன்னணி கண்காட்சிகளிலும், அந்தந்த மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்படும் கண்காட்சிகளிலும் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இலக்கு சார்ந்த குழுவைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு சந்தைப்படுத்தல் ஆதரவு வழங்கப்படுகிறது.
  • தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக  இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப்பணி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் தேசிய நடவடிக்கையான நமஸ்தே திட்டம்  (NAMASTE) செயல்படுத்தப்படுகிறது.
  • ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2024 வரையிலான காலகட்டத்தில், தூய்மைப்பணியாளர்கள் தொடர்பான மொத்தம் 860 குறைகள் / புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
  • பிச்சை எடுக்கும் நபர்களின் நலனுக்கான முயற்சியாக ஸ்மைல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ள நபர்களின் விரிவான மறுவாழ்வை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திருநங்கைகளுக்கு சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக திருநங்கைகளுக்கான சம வாய்ப்புகள் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2086117) Visitor Counter : 23


Read this release in: English , Gujarati