உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம், சலுகைகள்

प्रविष्टि तिथि: 18 DEC 2024 5:17PM by PIB Chennai

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்கள் ஆற்றிய பங்களிப்பினைக் கருத்தில் கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் 15.08.2016 அன்று திருத்தியமைக்கப்பட்டுள்ளதுமேலும், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில், இதுவரை சுதந்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியத்திற்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி நிவாரணத் திட்டம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக அகவிலைப்படி என்ற முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

துரந்தோவில் 2-வது 3-வது குளிர்சாதன வசதியுடன் கூடிய  பெட்டி, ராஜ்தானி  சதாப்தி உட்பட ஏதேனும் ஒரு ரயிலில் 1-வது வகுப்பு  2-ஆம் வகுப்பு குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி ஆகியவற்றில் கட்டணமில்லாமல் வாழ்நாள் முழுவதும் ரயிலில் பயணம் செய்ய சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களது மனைவி, ஒரு உதவியாளருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன.

விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தகுதி வாய்ந்த வாரிசுதாரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதியும், சிஜிஎச்எஸ் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ வசதியும் அளிக்கப்படுகின்றன.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் புதுதில்லியில் உள்ள ஸ்டேட் பவனில் உணவுடன் இலவச தங்குமிடம் தரப்பட்டுகின்றன.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலன் குறித்து தொடர்ந்து விசாரிக்கவும், அவர்களின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மாவட்ட ஆட்சியர்கள்  மாவட்ட மேலாண்மை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.         

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

----

TS/IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2085832) आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi