அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாடாளுமன்றக் கேள்வி: பாரத்ஜென் அறிமுகம்
Posted On:
18 DEC 2024 1:20PM by PIB Chennai
பாரத்ஜென் என்பது இந்தியாவின் மொழி, கலாச்சார மற்றும் சமூக-பொருளாதார பன்முகத்தன்மைக்கு ஏற்ப மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளை உருவாக்கும் ஒரு பன்முகப்பட்ட பன்மொழி சார்ந்த பெருமொழி மாதிரி முயற்சியாகும். ஜெனரேட்டிவ் ஏஐ மாதிரிகள் இந்தியாவின் மாறுபட்ட மொழிப்பரப்பை போதுமான அளவு பிரதிநிதித்துவம் செய்வதை உறுதி செய்வதற்காக, பாரத்ஜென் முதன்மை தரவு சேகரிப்பில் கவனம் செலுத்தும் "பாரத் டேட்டா சாகர்" என்ற முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. தரவுத் தொகுப்பிலா குறைவாக பிரதிநிதித்துவம் செய்யப்படும் இந்திய மொழிகளுக்கு கூடுதல் பயிற்சி தரவு கிடைக்க வேண்டும் என்ற தேவையை பூர்த்தி செய்ய இந்தத் தரவு சேகரிப்பு முயற்சிக்கிறது.
பாரத்ஜென் நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சி குழுக்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறது, உருவாக்கப்படும் ஜெனரேட்டிவ் ஏஐ மாதிரிகள் கூட்டாளர்களால் நீட்டிக்கப்படுவதையும், வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்காக பெரிய ஆராய்ச்சி மற்றும் கல்வி சாரா சமூகத்திற்கு கிடைக்கச் செய்வதையும் உறுதி செய்கிறது. நாட்டில் ஓரங்கட்டப்பட்ட, பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்கள் உட்பட திறமையான நிர்வாகம் மற்றும் பொதுமக்களை நோக்கிய பயன்பாடுகளுக்காக அரசாங்கம், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்-அப்களுடன் பாரத்ஜென் கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறது.
கலாச்சார அடையாளத்தையும் பிராந்திய வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்காக, உள்ளூர் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் தடையின்றி மொழிபெயர்ப்பதன் மூலம் பிராந்தியம் சார்ந்த உள்ளடக்கத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் பாரத்ஜென் வழங்குகிறது.
ஐஐடி பம்பாய், ஐடி ஹைதராபாத், ஐஐடி மண்டி, ஐஐடி கான்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐஎம் இந்தூர், ஐஐடி சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் சிறந்த ஏஐ ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பை பாரத்ஜென் உள்ளடக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி குழுக்கள் அரசு, தொழில்துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவின் மொழி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் குடிமக்களுக்கான உள்ளடக்கத்தை மனதில் கொண்டு, நாட்டின் பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களிடையே சமமான தொழில்நுட்ப அணுகலை உறுதி செய்கின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085534
***
TS/SMB/RJ/DL
(Release ID: 2085741)
Visitor Counter : 14