சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிரதமரின் செயல்திறன் மேம்பாடு, பயிற்சி திட்டம் (பிஎம்ஐ தக்ஷ்)
Posted On:
18 DEC 2024 2:23PM by PIB Chennai
மத்திய அரசின் பிரதமரின் செயல்திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டமானது ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், கழிவு சேகரிப்பவர்கள் உட்பட தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
2,71,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் இலக்குடன் 2021-22 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 1,55,208 நபர்கள் 2023-24 வரை பயிற்சி பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
TS/IR/KPG/KR/DL
(Release ID: 2085736)
Visitor Counter : 43