பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்
Posted On:
17 DEC 2024 3:26PM by PIB Chennai
2024 நவம்பர் 30 அன்றைய நிலவரப்படி பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பின்வருமாறு;
வகை பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை
பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் 8,672
பட்டியலிடப்படாத பொதுத் துறை நிறுவனங்கள் 46,939
ஒரு நபர் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 11,11,040
பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம், நிறுவனங்களின் பல்வேறு நிலைகளில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்கள் சட்டம், 2013-ல் பின்வரும் விதிகளை சேர்த்துள்ளது.
நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) பிரிவு 149 துணைப்பிரிவு (1)-ன் கீழ், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி) விதிகள், 2024-ன் விதி 3-ன் படி, ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட அல்லது ரூ.300 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட விற்றுமுதல் கொண்ட ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் மற்ற ஒவ்வொரு பொது நிறுவனமும் குறைந்தது ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கும் மற்றும் நிறுவனத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 172-ன் கீழ் அபராதம் விதிப்பதற்கு வகை செய்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சரும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.
----
TS/SV/KPG/DL
(Release ID: 2085432)
Visitor Counter : 16