சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார இயக்கம் குறித்த புதிய தகவல்
Posted On:
17 DEC 2024 3:30PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கம் அதன் இரண்டு துணை இயக்கங்களான தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், பொது சுகாதார வசதிகள் அனைவருக்கும் மலிவான, தரமான சேவையை வழங்கும் நோக்கில், பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவை வழங்குகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு சேவைகளை தேவைகளின் அடிப்படையில் வழங்குகிறது.
ஆயுஷ்மான் சுகாதார இயக்கம், தேசிய ஆம்பலன்ஸ் சேவைகள், நடமாடும் மருத்துவப் பிரிவுகள், ஆஷா பணியாளர்கள், 24 மணி நேர சேவைகள், முதலுதவி வசதிகள், பிரதமரின் தேசிய ரத்த சுக்திகரிப்புத் திட்டம், இலவச நோயறிதல் சேவை முனைப்பு, இலவச மருந்து, குழந்தைப் பேறு, பச்சிளங் குழந்தை சுகாதாரத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள், இரத்த சோகை, போதையில்லா இந்தியாவிற்கான உத்திசார் நடவடிக்கைகள் பிரதமரின் காசநோய் ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.
தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் தற்போதைய சாதனைகள் பின்வருமாறு
2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மகப்பேறு இறப்பு விகிதம், 1,00,000-க்கு 103 ஆக இருந்தது. 2018-20-ல் 1,00,000-க்கு 97 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம், பின்தங்கிய கிராமப்புற குடும்பங்களுக்கும், நகர்ப்புற தொழிலாளர் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட தொழில் வகைகளுக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085208
***
TS/SV/KPG/DL
(Release ID: 2085422)
Visitor Counter : 30