கலாசாரத்துறை அமைச்சகம்
வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தொல்பொருட்களை மீட்கும் நடவடிக்கைகள்
Posted On:
16 DEC 2024 4:18PM by PIB Chennai
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல தொல்பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து 297 தொல்பொருட்களை இந்தியாவுக்கு எடுத்து வர அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை தனது அதிகார எல்லைக்குட்பட்ட நினைவுச் சின்னங்கள், இடங்கள், தொல்பொருட்களைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் வழக்கமான கண்காணிப்பு தவிர, தனியார் பாதுகாவலர்களும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் தேவைக்கேற்ப பணியமர்த்தப்பட்டுள்ளனர். பழங்கால பொருட்கள் திருட்டு சம்பவம் நடக்கும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, திருட்டுப் போன தொல்பொருட்களைக் கண்டுபிடிக்கவும், சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சட்ட அமலாக்க முகமைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
VL/PLM/AG/DL
(Release ID: 2084984)
Visitor Counter : 23