கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க 'ஜல்வாஹக்' திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது

Posted On: 15 DEC 2024 1:46PM by PIB Chennai

 

தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான 'ஜல்வஹக்' என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று வெளியிட்டார்.

மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், எம்வி ஏஏஐ, எம்வி ஹோமி பாபா மற்றும் எம்வி திரிசூல் ஆகிய சரக்குக் கப்பல்களையும் அஜய் மற்றும் திகு ஆகிய இரண்டு தளவாடப் படகுகளையும் புதுதில்லி அரசு படகுத்துறையிலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொல்கத்தா - பாட்னா - வாரணாசி - பாட்னா - கொல்கத்தா இடையே ஒரு வழியாகவும், கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் உள்ள பாண்டு இடையேயும்  இந்தோ-வங்கதேச நெறிமுறை பாதை (ஐபிபிஆர்) வழியாகவும் குறிப்பிட்ட நாள் திட்டமிடப்பட்ட பாய்மரப் படகோட்ட சேவை இயக்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நமது வளமான உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மிகப்பெரிய திறனை உணர அரசு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, திறமையான போக்குவரத்து முறை என்ற அனுகூலத்தைக் கொண்டு, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஜல்வாஹக் திட்டம் ஆகியவற்றில் நீண்ட தூர சரக்குகளை ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பொருளாதார மதிப்பு முன்மொழிவுடன் நீர்வழிகள் வழியாக சரக்குகளின் இயக்கத்தை ஆராய வர்த்தக நலன்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கொல்கத்தாவிலிருந்து தொடங்கும் வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்கு சேவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரக்குகளை கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்யும். இது ஒரு திறமையான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான போக்குவரத்து முறையில் சரக்குகளை வழக்கமான இயக்கத்திற்கு தேசிய நீர்வழிகள் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை நமது பயனர்களிடையே உருவாக்கும். இந்த ஊக்கத் திட்டத்துடன் நமது கப்பல் ஆபரேட்டர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் சரக்குகளை வழங்குவதன் மூலம் நமது  வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியா வளர்ச்சியடைந்த  பாரதமாக மாறுவதை நோக்கி பயணிக்கும்போது போக்குவரத்து வழியாக மாற்றத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வைக்கு இது அர்த்தம்  சேர்க்கிறது என்று கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வளமான நீர்வழிகள் 2014 முதல் புத்துயிர் பெற்று வருகின்றன. நீர்வழிகளை புனரமைப்பதில் தொடர்ச்சியான முதலீட்டுடன், இந்தத் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் ரூ .95.4 கோடி முதலீட்டில் எயல்படுத்தப்படும்.  2014 வரை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட நீல பொருளாதாரத்தின் மதிப்பை திறக்கவும் இது ஒரு தீவிர முயற்சியாகும். புத்துயிர் பெற்ற தேசிய நீர்வழிகள் அதன் செயல்திறனை கணிசமாக நகர்த்தியுள்ளன, ஏனெனில் 2013-14 ஆம் ஆண்டில் 18.07 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகளின் மொத்த அளவு 2023-24 ஆம் ஆண்டில் 132.89 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 700% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நீர்வழிகள் மூலம் 200 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2047-ம் ஆண்டில், சரக்கு போக்குவரத்துக்கு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சியில் நம்பிக்கையுடன், 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்

மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், "நீர்வழிப் போக்குவரத்தை, குறிப்பாக வங்காளத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரதமர் திரு. நரேந்திர மோடி யின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், நீர்வழிப் போக்குவரத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், நீர்வழித் துறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவில், சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்தும். சிக்கனமான, பயனுள்ள, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தில் ஒரு புதிய காட்சியை உறுதியளிக்கிறது என்று தெரிவித்தார்.

*****

PKV/KV

 


(Release ID: 2084613) Visitor Counter : 62