பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேபாள ராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் இந்திய பயணத்தின் வெற்றிகரமான முடிவு

प्रविष्टि तिथि: 15 DEC 2024 12:07PM by PIB Chennai

 

2024 டிசம்பர் 11 முதல் 14 வரை நேபாள ராணுவத் தளபதி  சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் இந்தியாவுக்கு வருகை தந்தது, நேபாள ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இரு தரப்பிலும் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான முக்கிய ஈடுபாடுகளைக் கண்ட இந்தப் பயணம், பாதுகாப்பு நலன்களின் பகுதிகளில் மேம்பட்ட இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தமது பயணத்தின் போது, ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், இந்திய ராணுவத்தின் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியுடன் தொடர்ச்சியான பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, ஆழப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல் உள்ளிட்ட பலருடன் அவர் பேச்சு நடத்தினார்.

ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் வருகை இந்திய மற்றும் நேபாள ராணுவங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதில் ஒரு மகத்தான வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள், இரு ராணுவங்களுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய பிணைப்பை வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

*****

PKV/KV

 


(रिलीज़ आईडी: 2084590) आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi