மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி மீனவர்களுக்கான உரிமைகள்
Posted On:
13 DEC 2024 12:32PM by PIB Chennai
நாட்டில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறையுடன் கலந்தாலோசித்து தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 2,80,63,538 மீனவர்கள் உள்ளதாகவும் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை 12,83,751-ஆக உள்ளதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அனைத்து கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இந்த கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் மூலம் எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி பாரம்பரிய மீனவர்கள் மட்டுமே அதற்கென ஒதுக்கப்பட்ட மண்டலங்கள் / கடல் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். உதராணமாக குஜராத் மாநிலத்தில் கடற்கரையிலிருந்து 9 கடல் மைல் வரை உள்ள பகுதிகளை மீன்பிடிக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோவாவில் கடற்கரையிலிருந்து 2.7 கடல் மைல் வரையும், கர்நாடகாவில் 3.23 கடல் மைல் வரையும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, ஒடிசா மாநிலங்களில் எந்திரங்கள் பயன்படுத்தப்படாத படகுகள் மூலம் கரையிலிருந்து 5 கடல் மைல் வரை மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் 2024 டிசம்பர் 11 அன்று இந்தத் தகவலை தெரிவித்தார்.
****
VL/SV/KPG/RR/DL
(Release ID: 2084243)
Visitor Counter : 16