மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்
Posted On:
13 DEC 2024 12:39PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை 2020-21-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு மொத்தம் ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. மத்திய மீன்வளத்துறை பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், இதர செயலாக்க முகமைகளின் ரூ.20864.29 கோடி மதிப்பீட்டிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 8,871.45 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்காக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மீன்வள அமைச்சகம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள 100 கடலோர மீனவ கிராமங்கள் அனைத்து பருவநிலைகளையும் தாங்கக் கூடிய அளவில் உள்ளதாக கண்டறிந்துள்ளது.
இந்தக் கடலோர மீனவ கிராமகளில் மீன்வள மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக மீன்பிடிப்பிற்குப் பிந்தைய பணிகளான மீன் உலர்களம், மீன் அங்காடிகள், பனிக்கட்டி செடிகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றை சீராக நடத்துவதற்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், கடலோர மீனவர்களுக்கு உதவிடும் வகையில் கடற்பாசி வளர்த்தல், வண்ண மீன் வளர்ப்பு, இதர நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பணிகள் போன்ற பருவநிலைக்கு ஏற்ற வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கணக்கெடுப்பு மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2024 டிசம்பர் 11-ம் தேதி அன்று இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084076
-----
VL/SV/KPG/RR/DL
(Release ID: 2084242)
Visitor Counter : 34