எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பசுமை எஃகு வகைப்பாட்டியலை மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி வெளியிட்டார்

Posted On: 12 DEC 2024 6:17PM by PIB Chennai

2070-ம் ஆண்டில் நிகர பூஜ்ஜிய உமிழ்வு தீவிர இலக்குடன் ஒத்துப்போகும் வகையில் எஃகுத் துறையை கார்பன் நீக்கம் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. குறைந்த உமிழ்வு நோக்கிய இந்தியாவின் பயணத்தில் எஃகுத்துறை ஒரு வரலாற்று மைல்கல்லாக இருக்கும். மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்கள் அமைச்சர் திரு எச் டி குமாரசாமி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பசுமை எஃகு வகைப்பட்டியலை வெளியிட்டார். எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா, எஃகு அமைச்சகத்தின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிற அமைச்சகங்களின் பிரதிநிதிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், எஃகு தொழில் வீரர்கள், சிந்தனைக் குழுக்கள், கல்வியாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான பசுமை எஃகு வகைப்பட்டியலை வெளியிட்ட முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இது எஃகு அமைச்சகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மட்டுமல்ல, குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி மாறுவதற்கான நமது கூட்டு இயக்கத்திற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று மத்திய எஃகு அமைச்சர் திரு எச் டி குமாரசாமி தெரிவித்தார். பசுமை எஃகு வகைப்பாட்டின் வெளியீடு பசுமை எஃகு மீதான தேசிய இயக்கத்தை முன்னெடுப்பதில் ஒரு முக்கியமான படிநிலையை இது குறிக்கிறது.

மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா கூறுகையில், பசுமை எஃகு வகைபிரித்தல் எஃகு உற்பத்தியில் உருமாறும் கட்டமைப்பை பிரதிபலிக்கிறது, இது பசுமை எஃகு வரையறுக்கவும், புதுமையை வளர்க்கவும், இந்தியாவில் குறைந்த கார்பன் தயாரிப்புகளுக்கான சந்தையை உருவாக்கவும் உதவும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083839

***

PKV/AG/DL


(Release ID: 2083902) Visitor Counter : 27


Read this release in: English , Hindi , Kannada