தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு மற்றும் வலைதள அமைப்பு தயாரிப்புகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்
Posted On:
11 DEC 2024 4:10PM by PIB Chennai
தொலைத் தொடர்புத் தயாரிப்புகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கும், தொலைத் தொடர்புத் துறை, தொலைத்தொடர்பு மற்றும் வலைதள அமைப்பு தயாரிப்புகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை 24.02.2021 தேதியிட்ட அறிவிப்பு எண் 13-01/2020-ஐசி மூலம் விரிவான ஊக்கத்தொகை கட்டமைப்பு மற்றும் தகுதி அளவுகோல்களை பரிந்துரைக்கிறது https://dot.gov.in/pli-scheme..இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு 1% கூடுதல் ஊக்கத்தொகையை வழங்கும் திட்ட வழிகாட்டுதல்கள் ஜூன், 2022-ல் திருத்தப்பட்டன.
தொலைத்தொடர்பு மற்றும் வலைதள அமைப்பு தயாரிப்புகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மொத்தம் 42 பயனாளிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083236
***
IR/RJ/DL
(Release ID: 2083526)