தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் பிஎஸ்என்எல் சேவை
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2024 4:12PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் அவற்றின் தரத்தைக் கண்காணிக்கிறது. வடகிழக்கு மற்றும் அசாம் மாநில கைபேசி சேவைகளின் செயல்திறன் கண்காணிப்பு அறிக்கையின்படி, கடந்த நான்கு காலாண்டுகளில் (2023 டிசம்பர் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை), பிஎஸ்என்எல் வலைதள சேவை தொடர்பான தரநிலை அளவீடுகளை பூர்த்தி செய்துள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் தொலைத் தொடர்பு சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, டிஜிட்டல் பாரத் நிதித்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. i) நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை இல்லாத கிராமப்புற பகுதிகளில் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டம். (ii) எல்லைப் பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அல்லது புலனாய்வுச் சாவடிகள் ஆகியவற்றில் 4ஜி அடிப்படையிலான தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான திட்டம், (iii) வடகிழக்கு மாநிலங்களில் மொபைல் இணைப்புக்கான விரிவான தொலைத் தொடர்பு மேம்பாட்டுத் திட்டம், தொலைத் தொடர்பு வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மொபைல் சேவையை வழங்குதல், (iv) நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் தேவைப்படும் பகுதிகிளல் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குவதற்கான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துதல்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
*****
AD/SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2083509)
வருகையாளர் எண்ணிக்கை : 42