எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்துறை அமைச்சர் பசுமை எஃகு கட்டமைப்பை தொடங்கி வைக்கிறார்

Posted On: 11 DEC 2024 3:45PM by PIB Chennai

மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் அமைச்சர் திரு எச் டி குமாரசாமி நாளை (டிசம்பர் 12, 2024 அன்று) புதுதில்லியில் உள்ள, விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பசுமை எஃகு-க்கான கட்டமைப்பை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா, துறை சார்ந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிற அமைச்சகங்களின் பிரதிநிதிகள், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், எஃகுத் தொழில் துறையினர், சிந்தனைக் குழுக்கள், கல்வியாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

2070-க்குள் கரியமில வாயு உமிழ்வை நிகர பூஜ்ஜிய இலக்கை எட்ட, எஃகு உற்பத்தியின் மூலம் வெளிவரும் கரியமில வாயுவைக் குறைக்க எஃகு அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, அந்த அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு பசுமை எஃகு வகைப்பாட்டுக்கான கட்டமைப்பு  உருவாக்கப்பட்டது.

எஃகு உற்பத்தியில் பசுமை தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்கான தெளிவான கட்டமைப்பை வரையறுப்பதன் மூலம் நாட்டின் எஃகு உற்பத்தியில் குறைந்த அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் கொண்ட துறையாக மாற்றுவதற்கான முக்கியமான படிநிலையாகும்.

---

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2083498) Visitor Counter : 22