அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மேம்பட்ட நவீன ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவுதல்
प्रविष्टि तिथि:
11 DEC 2024 3:44PM by PIB Chennai
நான்கு தேசிய அளவிலான அதிநவீன பகுப்பாய்வு, தொழில்நுட்ப உதவி நிறுவன (SATHI) மையங்களும், முக்கிய பகுப்பாய்வு கருவிகளுடன் கூடிய பதினைந்து பிராந்திய அதிநவீன பகுப்பாய்வு கருவி வசதி (SAIF) மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. நான்கு சத்தி (SATHI) மையங்கள் தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனம், காரக்பூர் மேற்கு வங்க இந்திய தொழில்நுட்பக் நிறுவனம், வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் உள்ளன. மேலும் 15 எஸ்ஏஐஎஃப் மையங்கள் பல்வேறு மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன.
எஸ்ஏஐஎஃப், சத்தி மையங்கள் இரண்டும் ஆண்டுதோறும் சுமார் 1,00,000 மாதிரிகளை பகுப்பாய்வு செய்கின்றன. சுமார் 32,000 பயனர்களுக்கு சேவை செய்கின்றன. மேலும் சுமார் 2,200 ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு பங்களிக்கின்றன.
சத்தி திட்டத்தின் கீழ், கல்வி - ஆராய்ச்சி விவரம், சிறப்பு நிறுவன அந்தஸ்து, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) படி தரவரிசை, ஆராய்ச்சி வெளியீடுகளின் தரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் நிறுவனங்கள் தொகுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
எஸ்ஏஐஎஃப் மையங்களில் ஆராய்ச்சி வசதிகளை வலுப்படுத்த தற்போதைய ஆதரவு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய எஸ்ஏஐஎஃப் மையங்களை நிறுவ புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
ஆஸ்திரேலியா, பெலாரஸ், கனடா, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, ருமேனியா, ரஷ்யா, செர்பியா, ஸ்லோவேனியா, இலங்கை, ஸ்வீடன், தைவான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுடன் இருதரப்பு அறிவியல் - தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் ஏராளமான ஆராய்ச்சி, மேம்பாட்டு திட்டங்களுக்கு அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆதரவு அளித்துள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமும், இளம் திறமைகளை வளர்ப்பதன் மூலமும், அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மனித திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வேகத்தை அறிவியல் தொழில்நுட்பத் துறை அடைந்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிப் பயன்படுத்துவதற்கான தேசிய முன்முயற்சியான நிதி (NIDHI) திட்டத்தின் கீழ் அறிவியல் புதுமைகளை ஊக்குவிக்க கல்வி நிறுவனங்களுக்கு அறிவியல் - தொழில்நுட்பத் துறை உதவி வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் புத்தொழில் பாதுகாப்பு மையங்களை நிறுவ ஆதரவு அளிக்கப்படுகிறது. பல்வேறு கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களில் நாடு முழுவதும் சுமார் 180 புத்தொழில் பாதுகாப்பு மையங்களக அறிவியல் தொழில்நுட்பத் துறை நிறுவியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
TSPLMKPGDL
(रिलीज़ आईडी: 2083482)
आगंतुक पटल : 55