வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இன்வெஸ்ட் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
11 DEC 2024 3:40PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், வடகிழக்கு மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் முதலீடுகளை ஈர்த்தல், வசதி செய்தல் மற்றும் அதிகரித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்ற உதவுவதை நோக்கமாகக் கொண்டும், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் இன்வெஸ்ட் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுமுகமான முதலீட்டு வசதி, கவனம் செலுத்தும் முதலீடு, முதலீட்டு சூழல் அமைப்பில் மேம்பாடு மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல், முதலீட்டிற்கான பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை உருவாக்குதல், முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகளை தயாரிப்பதில் ஆதரவு, முக்கிய வளர்ச்சித் துறைகளை அடையாளம் காணுதல், முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவை செயல்பாடுகள் மற்றும் வழங்கல்களில் அடங்கும். இது வடகிழக்கு மாநிலங்களின் வளங்களை பயன்படுத்தி நீடித்த வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய உதவும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
****
AD/ PKV/ RJ/ DL
(Release ID: 2083436)
Visitor Counter : 13