தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அஞ்சல் அலுவலகச் சேவைகள்
Posted On:
11 DEC 2024 4:11PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள 1,64,987 அஞ்சல் நிலையங்களில் (தலைமை அஞ்சல் நிலையங்கள், துணை அஞ்சல் நிலையங்கள் மற்றும் கிளை அஞ்சல் நிலையங்கள் அனைத்தும் சேர்ந்தது) 7,58,00,677 சேமிப்பு கணக்குகள் உள்ளன.
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தானியங்கி பணம் வழங்கும் இயந்திர பயன்பாட்டை பெறும் வசதி, காசோலை புத்தகம் வழங்குதல், இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, பல்வேறு வகையான குறுஞ்செய்திகள் மூலம் விழிப்புணர்வு, இருப்பு மற்றும் கணக்கு அறிக்கையைப் பார்ப்பதற்கான இ-பாஸ்புக், வங்கிக் கணக்கிலிருந்து அஞ்சலக கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யும் வசதி மற்றும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் ஆகியவற்றைப் பெறலாம். வங்கிக் கணக்குகளில் வட்டி மற்றும் முதிர்வுத் தொகையை வரவு வைக்க மின்னணு தீர்வு சேவைகள் இசிஎஸ் வசதி, ஐவிஆர்எஸ் வசதி ஆகியவற்றையும் பெற முடியும்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2017-18-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை திறக்கப்பட்ட 4903 அஞ்சல் நிலையங்கள் மற்றும் நிதி உள்ளடக்கத்திற்காக 5 கி.மீ தூரத்திற்குள் வங்கி சேவை இல்லாத கிராமங்களை உள்ளடக்கிய 2023-24-ம் ஆண்டில் திறக்கப்பட்ட 5,746 புதிய அஞ்சல் நிலையங்கள் உட்பட நாட்டின் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 1,49,164 அஞ்சல் நிலையங்கள் (தலைமை அஞ்சல் நிலையங்கள், துணை அஞ்சல் நிலையங்கள் மற்றும் கிளை அஞ்சல் நிலையங்கள்) உள்ளன.
தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. நாட்டின் கிராமப்புறங்களில் செயல்படும் கிளை அஞ்சலகங்களுக்கு ஆன்லைன் தபால், நிதி மற்றும் காப்பீட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக மொபைல் சாதனங்கள், பயோமெட்ரிக் சாதனங்கள் மற்றும் தெர்மல் பிரிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083241
***
TS/IR/RJ/KR/DL
(Release ID: 2083375)
Visitor Counter : 54