தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகள் தினத்தை கொண்டாடியது

Posted On: 10 DEC 2024 4:40PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் சபையால் 1948-ம் ஆண்டு இதே நாளில் மனித உரிமைகள் பிரகடனம் மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுவதற்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மனித உரிமைகள் தின கொண்டாட்டம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள கொள்கைகளைப் பிரதிபலிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும், நீதி மற்றும் மனித கண்ணியம் சமூகத்தின் அடித்தளமாக இருக்கும் ஒரு உலகத்தை உருவாக்கவும், பங்களிக்கவும் நமது கூட்டு தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குவதன் மூலம் பட்டினியை ஒழித்தல் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்க சம வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக அரசால் எடுக்கப்படும் சிறந்த முன்முயற்சிகளுக்கு இந்தியா  தற்போது ஒரு பிரகாசமான உதாரணமாக திகழ்கிறது என்று அவர் கூறினார். வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், மேம்பட்ட சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நிதி சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் கல்வி வரை பல சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர்  குறிப்பிட்டார்.

***

TS/IR/AG/DL


(Release ID: 2082950) Visitor Counter : 48


Read this release in: Urdu , English , Hindi , Bengali-TR