கனரகத் தொழில்கள் அமைச்சகம்
கார்பன் உமிழ்வு இல்லாத ட்ரக் உற்பத்தி
प्रविष्टि तिथि:
10 DEC 2024 4:31PM by PIB Chennai
மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் 2024 செப்டம்பர் 29 அன்று பிரதமரின் மின்சார வாகனங்கள் திட்டத்தை ரூ.10,900 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் அறிவித்துள்ளது. இதில் ரூ.500 கோடி மின்சார டிரக்குகள் மற்றும் பிற வளர்ந்து வரும் மின்சார வாகனங்களுக்கான தேவையின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாகனங்கள் அதன் உதிரிப் பாகங்கள் உற்பத்தித் துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் நவீன தானியங்கி தொழில்நுட்ப தயாரிப்புக்கான (மின்சார டிரக்குகள் உட்பட) இந்தியாவின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்காக 2021 செப்டம்பர் மாதத்தில் ரூ.25,938 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 50% உள்நாட்டு மதிப்பு கூட்டு தயாரிப்புகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வாகன உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கவும் நிதிச் சலுகைகளை இத்திட்டம் முன்மொழிகிறது.
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்பகான பொதுவான உள்கட்டமைப்பை வசதிகளை அமைப்பதற்காக ரூ.2,000 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2082928)
आगंतुक पटल : 33