பாதுகாப்பு அமைச்சகம்
மாஸ்கோவில் ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வில் இந்திய, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக தலைமை தாங்கினார்கள்
Posted On:
10 DEC 2024 7:00PM by PIB Chennai
ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வு 2024 டிசம்பர் 10 அன்று மாஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரே பெலோசோவ் ஆகியோர் தலைமையில் கூட்டாக நடைபெற்றது. இந்தியா-ரஷ்யா உறவு மிகவும் வலுவானது என்றும், சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற ராஜீய கூட்டாண்மையின் பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். 2024-ம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்கள் உட்பட சமீபத்திய பரிமாற்றங்களால் உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டங்களில் ரஷ்ய தொழில்துறையினரின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். ரஷ்யாவுடன் சிறப்பு மற்றும் முன்னுரிமை பெற்ற உத்திசார் கூட்டாண்மையை நோக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். ஐஎன்எஸ் துஷில் கப்பல் பயன்பாட்டுக்கு வந்ததை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். 2021-31-ம் ஆண்டிற்கான ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டத்திற்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக, மத்திய மாஸ்கோவில் உள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அணிவகுப்பு மரியாதையை பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார். முன்னதாக, இரண்டாம் உலகப் போரின் போது கொல்லப்பட்ட சோவியத் வீரர்களின் நினைவை கௌரவிக்கும் வகையில் மாஸ்கோவில் உள்ள 'அறியப்படாத வீரரின் கல்லறையில்' அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
***
IR/AG/DL
(Release ID: 2082911)
Visitor Counter : 44