ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சுய ஆய்வுகள்
Posted On:
10 DEC 2024 3:09PM by PIB Chennai
கிராமப்புறப் பகுதிகளில் "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதி வாய்ந்த கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, 2016 ஏப்ரல் 1 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆரம்ப இலக்கு என்பது 2016-17 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதாகும். 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின்படி, இத்திட்டத்தின் கீழ் கூடுதல் தகுதியுள்ள ஊரகக் குடும்பங்களைக் கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 17.09.2024 அன்று தொடங்கப்பட்ட ஆவாஸ்+ 2024 மொபைல் செயலி மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த செயலியில் முன் பதிவு செய்யப்பட்ட நில அளவையர்கள் மூலம் சுய ஆய்வு மற்றும் உதவி நில அளவை ஆகிய இரண்டிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட சர்வேயர்களை அறிமுகப்படுத்துவதற்கான பயிலரங்குகள் நடந்து வருகின்றன, தற்போது வரை 26 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் செயல்படுத்துகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலை தெரிவித்தார்.
***
(Release ID: 2082688)
TS/IR/AG/KR
(Release ID: 2082755)
Visitor Counter : 47