வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தப் பயணம் தில்லியில் நிறைவடைந்தது
Posted On:
09 DEC 2024 2:34PM by PIB Chennai
இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான 3 நாள் பேச்சுவார்த்தை பயணம் 2024 டிசம்பர் 6 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. 2024 டிசம்பர் 4 முதல் 6 வரை நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்திய தூதுக்குழுவுக்கு வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான திரு. ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்கினார். ஆஸ்திரேலிய தூதுக்குழுவுக்கு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் முதல் உதவிச் செயலாளரும், தலைமை பேச்சுவார்த்தையாளருமான திரு. ரவி கேவல்ராம் தலைமை தாங்கினார்.
சரக்குகள், சேவைகள், இயக்கம், வேளாண் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பலவற்றில் வர்த்தகம் உள்ளிட்ட விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த்தின் பல முக்கிய பகுதிகளை இந்த விவாதங்கள் உள்ளடக்கியது. விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முறையான பலன்களையும், சமச்சீரான பலனையும் அளிப்பதை உறுதி செய்வதில் தாங்கள் பகிர்ந்து கொண்ட உறுதிப்பாட்டை இருதரப்பும் வலியுறுத்தின. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு நோக்கங்களுடன் ஒத்துப்போகும் சந்தை அணுகல் முறைகள் குறித்தும் விவாதங்கள் மையமாகக் கொண்டிருந்தன.
2024 ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிட்னியில் நடைபெற்ற 10 வது சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த பேச்சுக்கள் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082297
***
(Release ID: 2082297)
TS/IR/RJ/KR
(Release ID: 2082321)
Visitor Counter : 23