உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் ஜோத்பூரில் 11 அடி உயர சர்தார் வல்லபாய் படேலின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்


சர்தார் படேலின் திருவுருவச் சிலை வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் - திரு அமித் ஷா

Posted On: 08 DEC 2024 6:31PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 11 அடி உயர சர்தார் வல்லபாய் படேலின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (08.12.2024) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமித் ஷா தமது உரையில், சர்தார் படேல் வரலாற்றின் ஒரு முக்கிய பக்கம் என்றார். சர்தார் படேல் போன்ற மாமனிதரின் நற்பண்புகள், தியாகங்கள், கடின உழைப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகியவை நாட்டிற்கு பயனளிப்பதாக அவர் குறிப்பிட்டார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் உலகின் மிக உயரமான ஒற்றுமை சிலையை அமைத்து சர்தார் படேலை பிரதமர் திரு நரேந்திர மோடி கௌரவித்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்தார் படேலின் பண்புகள், பங்களிப்புகளை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று அவர் தெரிவித்தார்.  சர்தார் படேலின் பங்களிப்புதான் இந்தியா இந்திய ஒரே நாடாக ஒன்றுபட்டு நிற்க உதவியது என்று அவர் கூறினார்.

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். சர்தார் படேலின் சிலை அவரது கொள்கைகளை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டி உத்வேகம் அளிக்கும் என்று கூறி உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையை நிறைவு செய்தார்.

***

PLM /DL


(Release ID: 2082188) Visitor Counter : 26