ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமிய தொழில் முனைவோர் திட்டத்தின் நிலை
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2024 5:52PM by PIB Chennai
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் துணைத் திட்டமான புத்தொழில் கிராமிய தொழில்முனைவோர் திட்டம் (SVEP), சுய உதவிக் குழுவினருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விவசாயம் அல்லாத துறையில் சிறு தொழில்களை அமைக்க உதவுகிறது. 2015-16-ம் ஆண்டில் மாநில அரசுகளிடமிருந்து புத்தொழில் கிராமிய தொழில்முனைவோர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டங்கள் வரவழைக்கப்பட்டன. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், ஒப்புதல்களும் நிதி விடுவிப்பும் 2016-17-ம் ஆண்டில் தொடங்கியது.
2017-18-ம் ஆண்டில் நிறுவன உருவாக்கம் தொடங்கியது. இதுவரை, 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 429 வட்டாரங்களில் புத்தொழில் கிராமிய தொழில்முனைவோர் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 280 வட்டாரங்களில் விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் அளிக்கப்பட்டு திட்ட அமலாக்கம் தொடங்கப்பட்டுள்ளது. புத்தொழில் கிராமிய தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரைமொத்தம் 3,13,464 நிறுவனங்கள் ஆதரிக்கப்பட்டுள்ளன.
***
TS/PLM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2081841)
வருகையாளர் எண்ணிக்கை : 78