ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் சாலை பராமரிப்பு

Posted On: 06 DEC 2024 5:53PM by PIB Chennai

'ஊரகச் சாலைகள்' என்பது மாநில அரசு தொடர்புடையதாகும். பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் திட்ட வழிகாட்டுதல்களின்படி, இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சாலைகளை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும். அனைத்து சாலைப் பணிகளும் ஆரம்ப ஐந்தாண்டு பராமரிப்பு ஒப்பந்தங்களின்படி கட்டுமான ஒப்பந்தத்துடன் அதே ஒப்பந்தக்காரருடன் செய்து கொள்ளப்படும். நிலையான ஏல ஆவணத்தின்படி. பராமரிப்பு நிதியை மாநில அரசே வழங்கும். 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சாலைகளை பராமரிக்கவும் மாநில அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சகம் உருவாக்கியுள்ள கொள்கை கட்டமைப்பின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் தங்களது ஊரக சாலை பராமரிப்பு கொள்கைகளை வகுத்துள்ளன. பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் சாலைகளை மின்னணு முறையில் பராமரிக்கும் முறை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் அமலாக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல ஆய்வுக் கூட்டங்கள், செயல்திறன் ஆய்வுக் குழு கூட்டங்கள், மாநிலங்களுடனும் அதிகாரம் அளிக்கப்பட்ட முன் அதிகாரம் பெற்ற குழுக் கூட்டங்களுடனும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2081839) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi