எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு உற்பத்திக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம்

प्रविष्टि तिथि: 06 DEC 2024 5:58PM by PIB Chennai

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (PLI) திட்டம் 2021 ஜூலை மாதம்  எஃகு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம்  எஃகு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், மூலதன முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வகை செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் நாட்டின் எஃகு தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும் உதவிடுகிறது.  எஃகு உற்பத்திக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் கூடுதல் முதலீடாக ரூ.27,106 கோடி, கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக 24 மில்லியன் டன் எஃகு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் 14,760 நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

*****

SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2081718) आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी