சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
68.97 கோடி ஆயுஷ்மான் அடையாள எண்கள் உருவாக்கம்:
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் குறித்த அண்மைத் தகவல்
Posted On:
06 DEC 2024 4:00PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ், 68.97 கோடிக்கும் அதிகமானோருக்கு சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 3.49 லட்சம் பேர் சுகாதார வசதிக்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 5.23 லட்சம் சுகாதார வல்லுநர்கள் சுகாதார பராமரிப்பு நிபுணத்துவ பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். 45.37 கோடி எண்ணிக்கையிலான பதிவுகள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
1,52,544 சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கத்துடன் செயல்படுத்தப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. இதில் 1,31,065 அரசு மருத்துவமனைகள் மற்றும் 21,479 தனியார் மருத்துவமனைகள் அடங்கும்
நாட்டின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுற்கு தேவையான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் சுகாதார வசதிகளை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், பாதுகாப்பானதாகவும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையிலும் வழங்குவதை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்த சுகாதார இயக்கத்தின் பயன்கள் நாட்டில் உள்ள அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.. தொலைபேசி மருத்துவ ஆலோசனை போன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் மூலம் சுகாதார சேவைகள் குறிப்பாக தொலைதூரப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வழி வகுக்கிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
**
TS/SV/KPG/DL
(Release ID: 2081703)
Visitor Counter : 40