பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
குடிமைப் பணி பயிற்சி நிறுவன ஆசிரியர்களுக்கான பிரச்சினையை விவரித்து எழுதுதல் மற்றும் கற்பித்தல் பயிலரங்கத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2024 4:04PM by PIB Chennai
குடிமைப் பணி பயிற்சி நிறுவன ஆசிரியர்களுக்கான பிரச்சினையை விவரித்து எழுதுதல் மற்றும் கற்பித்தல் பயிலரங்கத்தை தொடங்கி வைக்கிறார் டிமைப் பணி பயிற்மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், டிசம்பர் 9-ம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்.
அம்ரித் கியான் கோஷ் இணையதளத்தையும் அமைச்சர் துவக்கி வைக்கிறார். திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் கர்மயோகி பாரத் ஆகியவை இணைந்து ஐ-காட் பிளாட்பாரத்தில் இந்த பயிற்சித் தளத்தை உருவாக்கி உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டு ஆணையம், கர்மயோகி பாரத், ஆசிய வளர்ச்சி வங்கி, மற்றும் ஸ்டான்ஃபோர்டு லீடர்ஷிப் அகாடமி ஃபார் டெவலப்மென்ட் அமைப்பின் திட்ட பயிற்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள குடிமைப் பணி பயிற்சி நிறுவனங்களைச் (சி.எஸ்.டி.ஐ) சேர்ந்த 60 ஆசிரியர்களுக்கு நவீன முறையில் திட்ட வரைவு உருவாக்குவது குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த முயற்சி 2024-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையும் டிசம்பர் 16 முதல் 20-ம் தேதி வரையும், இரண்டு குழுக்களாக புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081485
**
TS/SV/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2081670)
வருகையாளர் எண்ணிக்கை : 60