சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
தொழில்முனைதல் மூலம் விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
06 DEC 2024 1:49PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம்கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி நிறுவனமானது தலித் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்சபையுடன் (என்எம்டிஎஃப்சி) இணைந்து விளிம்புநிலை சமூகங்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024 டிசம்பர் 7, அன்று புதுதில்லியில் கையெழுத்திடுகிறது.புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் உள்ள நாளந்தா அரங்கில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அத்துறைச் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார்,தலித் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் மிலிந்த் காம்ப்ளே, என்.எம்.டி.எஃப்.சி தலைவர் டாக்டர் அபா ராணி சிங், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி நிறுவனம், தலித் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்சபை ஆகியவற்றின் நிபுணத்துவம் மற்றும் ஆதாரங்களை இணைத்து, தற்சார்பை ஊக்குவிப்பதன் மூலம், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு சமூக-பொருளாதார அதிகாரமளித்தலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2081646)