சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 826 சட்டக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி

Posted On: 06 DEC 2024 3:37PM by PIB Chennai

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ) ஒப்புதல் அளித்த சட்டக் கல்வி மையங்களின் எண்ணிக்கை  மொத்தம் 826 ஆகும். இதில் தமிழ்நாட்டில் 23 சட்டக்கல்வி நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் https://www.barcouncilofindia.org/user/login  என்ற இணைய தளத்தின் மூலம் பெறப்படுகின்றன.   2023-2024 ஆம் ஆண்டில் மொத்தம் 436 புதிய விண்ணப்பங்கள் பதிவுக்கான இணைய தளத்தில் பெறப்பட்டன.

சட்டக் கல்வியின்  தரத்தை நிர்ணயிப்பதும் மேம்படுத்துவதும் இந்திய பார் கவுன்சிலின் பணியாகும்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/KR/DL


(Release ID: 2081590) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi