சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு
Posted On:
05 DEC 2024 5:55PM by PIB Chennai
நாட்டில் 1,46,195 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பில் நடப்பு நிதியாண்டில் சுமார் 816 கிலோமீட்டர் நீளத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதும் பராமரிப்பதும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். தேசிய நெடுஞ்சாலைகளின் நிலைமைகளை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பல்வேறு செயலாக்க முகமைகள் மதிப்பீடு செய்கின்றன. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளை போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் வைத்திருக்க தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்புக்காக சாலை போக்குவரத்து அமைச்சகம் ரூ.6581 கோடி ஒதுக்கீடு செய்து அதில் ரூ.6,523 கோடி செலவிடப்பட்டது.
நாட்டில் கடந்த நிதியாண்டில் மொத்தம் 36,503 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் 869 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
TS/PLM/KPG/DL
(Release ID: 2081331)
Visitor Counter : 24